×

சேலத்தில் உரிய அங்கீகாரம் இன்றி பணம் இரட்டிப்பாகும் என்று கூறி முதலீடு வசூலித்து மோசடி: 3 பேர் கைது

சேலம்: சேலத்தில் உரிய அங்கீகாரம் இன்றி பணம் இரட்டிப்பாகும் என்று கூறி முதலீடு வசூலித்து முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்துள்ளனர். மனிதநேய அறக்கட்டளை நிறுவன தலைவர் விஜயாபானு, ஜெயப்பிரதா, பாஸ்கர் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.12 கோடி ரொக்கம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி, 1000 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் அன்னை தெரசா மகளிர் அறக்கட்டளை என்ற பெயரில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்துள்ளனர். சேலத்தில் திருமண மண்டபம் ஒன்றில் அனுமதியின்றி முதலீடு வசூலித்தபோது 3 பேரையும் போலீஸ் கைது செய்தது.

அன்னை தெரசா அறக்கட்டளையில் முதலீடு செய்தால் 7 மாதத்தில் பணம் இரட்டிப்பாகும் என்று கூறி பணம் வசூல் செய்துள்ளனர். பணம் 7 மாதத்தில் இரட்டிப்பாகும் என்று கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.50,000 முதல் 5 லட்சம் வரை வசூலித்துள்ளனர். முதலீடு செய்பவர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் பரிசு வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான விளம்பரம் செய்துள்ளனர். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி நேற்று நூற்றுக்கணக்கானோர் திரண்டு முதலீடு செய்துள்ளனர்.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து கடந்த ஓராண்டுக்கு மேலாக அறக்கட்டளையை நடத்தி வந்துள்ளனர். நேற்று முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்தபோது சம்பவ இடத்துக்கு சென்று அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். எவ்வித ரசீதும் கொடுக்காமல் பணம் வசூலித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

The post சேலத்தில் உரிய அங்கீகாரம் இன்றி பணம் இரட்டிப்பாகும் என்று கூறி முதலீடு வசூலித்து மோசடி: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : SALEM ,Vijayapanu ,Jayapratha ,Baskar ,Humanity Foundation ,Dinakaran ,
× RELATED சேலத்தில் உரிய அங்கீகாரம் இன்றி பணம்...