×

திருச்சியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, ஜன.24: ஜன.24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி தென்னக ரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஆண்டுதோறும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் உரிமைகள் கல்வி சுகாதாரம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு ஆகியவற்றின் அவசியத்தையும், குழந்தைகளின் நான்கு வகையான உரிமைகள் வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமைகள் குறித்தும், குழந்தைகள் மீதான வன்முறைகளான பெண் சிசுக்கொலை கருக்கலைப்பு குழந்தைத் திருமணம் குழந்தை கடத்தல், பாலியல் வன்முறை சட்ட விரோதமாக குழந்தை விற்றல் குழந்தை சித்திரவதை செய்தல் குழந்தைத் தொழிலாளர்,

குழந்தையை வைத்து யாசகம் எடுத்தல் குறித்தும் குழந்தைகள் நலம் சார்ந்த சட்டங்களான இளஞ்சிறார் நீதி சட்டம் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்தும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம். தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் தற்காலிக வளர்ப்புத் திட்டம், பிற்காப்பு வளர்ப்புத் திட்டம் குழந்தை தத்தெடுத்தல், மத்திய தத்து வள மையம் CARA பணிகள் மற்றும் கிராம வட்டார மாவட்ட உள்ளாட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களின் செயல்பாடுகள் இலவச தொலைபேசி எண்களான 1098, 181, 14417, 1930, 14417 குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

The post திருச்சியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : National Girl Child Day ,Trichy ,Southern Railway Zone Multi-disciplinary Training Institute ,District Child Welfare Committee ,Dr. ,Prabhu… ,Dinakaran ,
× RELATED தேசிய பெண் குழந்தைகள் தினம்.. பெண்...