- ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
- அமைச்சர்
- கே. என் நேரு
- திருச்சி
- தமிழ்
- நாடு சிவில் சப்ளையர்கள்
- மாநகராட்சி
- தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
- கலைஞர் அறிவாலயம்
திருச்சி, ஜன.24: திருச்சியில் தமிழ்நாடு சிவில் சப்ளையர்ஸ் கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைமை செயற்குழு கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் தலைமை செயற்குழு கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் கோ.சி.வள்ளுவன் தலைமையில் தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் புதிய பேரவை நிர்வாகிகளை நியமித்த திமுக தலைமை கழகத்திற்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர். மண்டல சங்க தேர்தலை நடத்துவது, சங்கத்தின் எஞ்சிய கோரிக்கைகளை வென்றெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் அகில இந்திய (தொ.மு.ச பேரவையின் பொது செயலாளர்) சண்முகம் எம்பி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர மேயர் அன்பழகன், மாநில பேரவை செயலாளர் எத்திராஜ், திருச்சி மண்டல தலைவர் ஆப்ரகாம், செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் ஆறுமுகம், உள்ளிட்ட மத்திய சங்க நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மண்டல செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post எம்ப்ளாயிஸ் யூனியன் செயற்குழு கூட்டம்: அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு appeared first on Dinakaran.