×

பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

 

திருப்பூர், ஜன.24: திருப்பூர் மாவட்ட கலெக்டா் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள் கலந்து கொண்டு பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளார்கள்.

அவினாசி வேட்டுவபாளையம் அ.குருமபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் சூரியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கேயம் நெகலி எல்லப்பம் பாளையம்புதுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,மடத்துக்குளம் பாலப்பம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,பல்லடம் சித்தம்பலம் பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்.

திருப்பூர் வடக்கு நெருப்பொிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,திருப்பூர் தெற்கு நல்லூர் விஜயாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உடுமலை சின்னவீரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி டவுன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் செல்போன் எண் பதிவு,மாற்றம் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தல் போன்ற கோரிக்கைகளை உடனடியாக நிவா்த்தி செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Public Distribution Scheme Special Grievance Redressal Camp ,Tiruppur ,Tiruppur District ,Collector ,Christhu Raj ,Tiruppur district… ,Dinakaran ,
× RELATED தெருநாய்களால் கொல்லப்படும் கால்நடைகள்