ஊட்டி, ஜன.24: ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சுமார் 1700க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கடைகள் கட்டும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் கடந்த ஒராண்டிற்கு முன் துவக்கியது. முதற்கட்டமாக காபி அவுஸ் பகுதிக்கு அருகே உள்ள பன்றி இறைச்சி கடைகள் முதல் எலக்ட்ாிக்கல் கடை வரை 190 பழுதடைந்த கடைகள் இடித்து விட்டு கட்டுமான பணிகளை துவக்கியது.
தரைத்தளத்தில் 126 நான்கு சக்கர வாகனங்கள், 163 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் பார்க்கிங் தளமும், முதல் தளத்தில் 240 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக இடிக்கப்பட்ட கடைகள் இருந்த இடத்தில் தற்போது புதிய கடைகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லி பாபு, நகராட்சிப் பொறியாளர் சேகரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
The post மார்க்கெட் கட்டுமான பணிகளை ஆய்வு appeared first on Dinakaran.