×

கோவை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

 

கோவை, ஜன.24: கோவை குனியமுத்தூர் ஆர்.கே.வி. சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இப்பள்ளி வளாகத்தில் துவங்கிய இந்த பேரணியை பள்ளியின் செயலாளர் ஜெசிந்தா செல்வி மற்றும் இணை செயலாளர் தாரணி தேவி துவக்கி வைத்தனர்.

முக்கிய சாலைகளின் வழியாக சென்ற இப்பேரணியில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டு சென்று மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post கோவை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Coimbatore Road Safety Awareness Rally ,Coimbatore ,RKV Senior Secondary School ,Kuniyamuthur ,Jesinda Selvi ,Dharani Devi… ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி பள்ளியில் ‘விரிச்சுவல் ரியாலிட்டி’ ஆய்வகம்!!