கோவை, ஜன. 24: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் 76-வது குடியரசு தின விழா வரும் 26ம் தேதி வ.உ.சி மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. இதில், போலீசார், என்சிசி மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை மற்றும் தேர்வு உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் பள்ளியில் நேற்று நடந்தது.
இதில், மாணவ, மாணவிகள் குழு நடனம், தனி நபர் நடனம், பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிக்கு ஒத்திகையில் ஈடுபட்டனர். விழாவில், வாகராயம்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் பம்பை நடனம், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் படுகர் இன மக்களின் நடனம் என கோவை, பொள்ளாச்சியை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.
The post குடியரசு தின விழா முன்னிட்டு மாணவ, மாணவிகள் ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.