×

கரூர் பசுபதிபாளையம் அருகே சாலை பாதுகாப்பு விழா விழிப்புணர்வு பேரணி

கரூர், ஜன. 24: கரூர் பசுபதிபாளையம் அருகே சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் போக்குவரத்து துறை சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதனை, கரூர் டிஎஸ்பி செல்வராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பசுபதிபாளையம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நந்தகோபால், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உட்பட அனைத்து காவலர்களும் கலந்து கொண்டனர்.கரூர் தெரசா மேல்நிலைப்பள்ளி அருகே துவங்கிய இந்த பேரணியில், பள்ளி மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பள்ளியின் அருகே துவங்கிய இந்த பேரணி காந்திகிராமம் வரை சென்று திரும்பவும் பள்ளி அருகே வந்து நிறைவடைந்தது. இந்த பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்தான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி மாணவிகள் பேரணியாக சென்றனர்.

The post கரூர் பசுபதிபாளையம் அருகே சாலை பாதுகாப்பு விழா விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Road Safety Festival ,Karur Green Palace ,Karur ,Road Safety Month ,Green Party Transport Department ,Karur Municipality ,Karur DSP ,Dinakaran ,
× RELATED கட்டுமான பொருட்களை ஏற்றிச்செல்லும்...