×

பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிப்பு: மருந்தகம், மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் மக்கள்

கரூர், ஜன. 24: அதிகாலை நேர பனியின் தாக்கம் காரணமாக, மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 3 மாதங்கள் பனிப்பொழிவு மாதங்களாக உள்ளது. டிசம்பரில் ஆரம்பித்து பிப்ரவரி இறுதி வரை இதன் தாக்கம் இருக்கும். இந்தாண்டு, அதிகளவு மழை பெய்துள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக காலை நேரத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிகாலை பனியின் காரணமாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் முதல், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பனிப்பொழிவு காரணமாக, சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற பல்வேறு உபாதைகளால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த வகை பாதிப்பு குறைந்தது ஒரு வாரமாவது நீடிக்கும் என்பதால், கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பரவலாக இந்த பிரச்னை காரணமாக பாதிக்கப்பட்டு அவதிப்ப ட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைக ளுக்கு காலை, மாலை நேர ங்களில் அதிகளவு நோயாளிகள் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே நேரத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துகடைகளிலும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகளுக்கு மாத்திரை, இருமல் மருந்து போன்றவற்றை வாங்கிச் செல்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த பிரச்னையால் குடும்பத்தில் ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ள நிலைதான் இன்றைக்கு வரை கரூர் மாவட்டத்தில் நிலவி வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக அதிகாலை நேரத்தில் தாக்கும் பனிப்பொழிவுதான் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் பிப்ரவரி (மாசி) மாதத்தில் வரும் சிவராத்திரி நிகழ்வுக்கு பிறகு பனியின் தாக்கம் குறையும் என்பதுதான் வழக்கமான நடைமுறையாக உள்ளது. பனிப்பொழிவின் தாக்கம் மார்ச் மாதம் வந்ததும் முற்றிலும் குறைந்து விடும் என்பதால், பனியின் தாக்கம் எப்போது குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிப்பு: மருந்தகம், மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Karur ,
× RELATED கரூர் ரத்தினம் சாலையில் கால்நடைகள் நடமாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு