×

ஒரே நாளில் குவிந்த ஆயிரம் நெல் மூட்டைகள் அதிகபட்சமாக ₹1779க்கு விற்பனை செங்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்

செங்கம், ஜன. 24: செங்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரேநாளில் ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. இதில் அதிகபட்சமாக ₹1779க்கு விற்பனை செய்யப்பட்டது. செங்கம் தாலுகாவில் உள்ள சிறு மற்றும் பெரு விவசாயிகள் பயன்பெறும் விதமாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்ததால் அதிகபடியாக நெல் மகசூல் அடைந்து அதனை பல கிராமங்களில் இருந்தும் செங்கம் பகுதியில் உள்ள தமிழக வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக நேற்று எடுத்து வந்தனர்.

நேற்று ஒரேநாளில் ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு நெல் மூட்டைகளை வாங்கி சென்றனர். நெல் மூட்டையின் விலை ₹1450 முதல் அதிகபட்சமாக ₹1779க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நெல் மூட்டை அம்மன் ஆர்என்ஆர் ரக ஏடிடி நெல் மூட்டைகளை அறுவடை செய்து மூட்டை மூட்டையாக எந்த ஒரு இடைத்தரகரின்றி தங்கு தடை இன்றி தங்களின் விலை பொருட்களை எடை குறையாமலும் விலை குறையாமலும் அதிக விலைக்கு விற்பனை செய்து எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தினசரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கும். எனவே விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

The post ஒரே நாளில் குவிந்த ஆயிரம் நெல் மூட்டைகள் அதிகபட்சமாக ₹1779க்கு விற்பனை செங்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் appeared first on Dinakaran.

Tags : Chengam ,sales ,Dinakaran ,
× RELATED வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை...