×

ஏழை மக்கள் ஆவணங்களை பயன்படுத்தி போலி கம்பெனிகள், பல கோடி வரி ஏய்ப்பு புகார் அளிக்க ஜிஎஸ்டி கமிஷனர் தகவல்

வேலூர், ஜன.24: ஏழை மக்கள் ஆவணங்களை பயன்படுத்தி போலி கம்பெனிகள் அதிகரித்துள்ளது. பல கோடி வரி ஏய்ப்பும் செய்யப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி கமிஷனர் கூறினார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஏழை மக்களின் ஆவணங்களை பயன்படுத்தி பல கோடிகளில் ஜிஎஸ்டி வரிபாக்கி உள்ளது என்று கடிதம் வருகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக மாவட்டங்கள் தோறும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, மத்திய கலால் வரி கமிஷனர் நாசீர்கான் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி வேலூரில் உள்ள ஓட்டலில் நேற்று ஜிஎஸ்டி தொடர்பான விழிப்புணர்வுகூட்டம் நேற்று நடந்தது.

ஜிஎஸ்டி கமிஷனர் நாசீர்கான் தலைைம தாங்கினார். இணை கமிஷனர் ரமேஷ் பாரதி, உதவி கமிஷனர்கள் கிருஷ்ணா, சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஏழை மக்களின் ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டு பலகோடிகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. எனவே பொதுமக்கள் ஆதார், பான் கார்டு யாரிடமாவது வழங்கும் முன் என்ன காரணத்திற்காக வழங்குகிறீர்கள் என்று அறிந்து வழங்க வேண்டும். வங்கி கடன் பெற்றுத்தருகிறோம் என்று ஏமாற்றினால் அவர்களிடம் வழங்காதீர்கள். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஏழை மக்களின் ஆவணங்களைபயன்படுத்தி போலி கம்பெனிகள் இயங்கி வந்துள்ளது. இவை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மூலம் பாதிக்கப்பட்டால், உடனே உரிய ஆவணங்களுடன் சென்று சம்மந்தப்பட்ட மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளிக்க வேண்டும், என்றார். இதில் ஜிஎஸ்டி அதிகாரிகள், ஜிஎஸ்டி செலுத்துவோர், பாதிக்கப்பட்டவர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

The post ஏழை மக்கள் ஆவணங்களை பயன்படுத்தி போலி கம்பெனிகள், பல கோடி வரி ஏய்ப்பு புகார் அளிக்க ஜிஎஸ்டி கமிஷனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : GST ,Vellore ,GST Commissioner ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED போலி நிறுவனங்கள் மூலம் ரூ3,200 கோடி ஜிஎஸ்டி மோசடி