×

அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகள்

நாமக்கல், ஜன.24: நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் ₹16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணியை ராஜேஸ்குமார் எம்.பி தொடங்கி வைத்தார். நாமக்கல் மாநகராட்சி 36வது வார்டு சந்தைப்பேட்டை புதூரில், ராஜேஸ்குமார் எம்பியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹16 லட்சம் மதிப்பீட்டில், புதிய அங்கன்வாடி மையம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை மாநகராட்சி மேயர் கலாநிதி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கான கட்டுமான பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகர திமுக செயலாளர்கள் ராணா.ஆனந்த், சிவக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் டாக்டர் விஜய்ஆனந்த், ஈஸ்வரன், குட்டி(எ) செல்வகுமார், இளம்பரிதி, துணை செயலாளர் புவனேஸ்வரன், இளைஞரணி சதீஸ், மாணவரணி கடலரசன் கார்த்தி மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகள் appeared first on Dinakaran.

Tags : Anganwadi Center ,Namakkal ,Rajesh Kumar ,Puttur, Marketpet, Namakkal ,Puttur ,Ward 36 ,Namakkal Corporation ,Dinakaran ,
× RELATED அண்ணன் ஓபிஎஸ்… டிடிவி.தினகரன் சார்… செல்லூர் ராஜூ திடீர் மரியாதை