- காவிரி
- பரமத்தி வேலூர்
- நாமக்கல் மாவட்டம்
- பரமத்தி வேலூர் போலீஸ்
- எஸ்ஐ ரவிச்சந்திரன்
- எஸ்எஸ்ஐ கோபாலகிருஷ்ணன்
- குப்புச்சிபாளையம்
- பொய்யேரி
- நன்செய்…
பரமத்தி வேலூர், ஜன.24: பரமத்திவேலூர் அருகே காவிரியில் வெடி வைத்து மீன் பிடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் போலீஸ் எஸ்ஐ ரவிச்சந்திரன் தலைமையில் எஸ்எஸ்ஐ கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், பரமத்திவேலூர், குப்புச்சிபாளையம், பொய்யேரி, நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அணிச்சம்பாளையம் பகுதியில் சென்றபோது, அங்குள்ள காவிரி ஆற்றில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அப்பகுதிக்கு போலீசார் விரைந்தனர். போலீசாரை கண்டதும் அங்கு வெடி வைத்து மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்த 4 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்ததில், கீழ் பாலப்பட்டியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளர்கள் நவீன்(23), அஜித்(28), கூலி தொழிலாளி நத்திஷ்(23) மற்றும் கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் அருகே பழனிமுத்து நகரைச் சேர்ந்த நீர்வளத்துறை தற்காலிக பணியாளர் கோகுல்(27) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.
The post காவிரியில் வெடி வைத்து மீன் பிடித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.