×

பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

நாமக்கல், ஜன.24: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நாளை(25ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்கள், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் 25ம் தேதி(நாளை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

The post பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Public Distribution Scheme Grievance Redressal Camp ,Namakkal ,Namakkal district ,District ,Collector ,Uma ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் கடைகளை 11ம்தேதி மூட உத்தரவு