ஓமலூர், ஜன.24: ஓமலூர் வட்டாரத்தில் நடைபெறும் எருதாட்டத்திற்கு காளைகளை வாடகைக்கு விடப்படுகிறது. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் மார்ச் மாதம் வரை கோயில் திருவிழாக்களில் எருதாட்டம் நடத்தப்படுகிறது. அம்மன் கோயில்களில் எருதாட்டம் நடத்தினால் கிராமம் செழிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் எருதாட்டம் நடத்தப்படுகிறது. எருதாட்டத்திற்காக காளைகள் வாடகைக்கு விடப்படுகிறது. ஒவ்வொரு காளையும், ஆட்டம் ஆடுவதை பொறுத்து வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது. சில காளைகள் மூக்கணாங்கயிறை அவிழ்த்ததும் துள்ளி குதித்து விளையாடும், கூட்டத்தில் புகுந்தாலும் யாரையும் முட்டாமல் ஓடும், இளைஞர்களை இழுத்து கொண்டு களத்தில் மக்களை கவர்ந்து ஓடுவது என ஒவ்வொரு காளையும் ஒவ்வொரு வகையில் விளையாடுகிறது. அதனால், காளையின் ஆட்டத்தை பொறுத்து ₹5 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை வாடகைக்கு பிடித்து எருதாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் ஒவ்வொரு காளையும் ₹5 லட்சம் வரை வருவாய் ஈட்டுமென கூறுகின்றனர். இதனால், காளை வளர்ப்போருக்கு போதுமான வருவாயை காளைகள் ஈட்டி கொடுக்கிறது.
The post வாடகைக்கு செல்லும் எருதாட்ட காளைகள் appeared first on Dinakaran.