* ஜகர்தாவில் நடைபெறும் இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் போட்டியின் முதல் சுற்றிலேயே சிந்து உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் வெளியேறினர். நேற்று நடந்த 2வது சுற்று இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிராக் ஷெட்டி, சாத்விக் ரெட்டி இணை உள்ளிட்ட மற்ற வீரர்கள், வீராங்கனைகளும் தோல்வியடைந்தனர்.
* தென் ஆப்ரிக்காவில் ‘எஸ்ஏ20’ டி20 கிரிக்கெட் லீக் போட்டி நடக்கிறது. அதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி நேற்று முன்தினம் இரவு பிரிடோரியா கேபிடல்ஸ் அணியை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது சன்ரைசர்ஸ் அணிக்கு கிடைத்த ஹாட்ரிக் வெற்றியாகும்.
* ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஜே கிளார்க் (43) நேற்று ஆஸ்திரலேியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இணைந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் உயரிய விருதான ‘ஹால் ஆஃப் பேம்’ விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பெறும் 64வது வீரர் மைக்கேல் ஆவார். அவர் ஆஸி அணிக்காக 115டெஸ்ட், 245ஒருநாள், 34 டி20 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி 17ஆயிரத்துக்கும் அதிகமான ரன்னை விளாசி உள்ளார்.
The post சில்லிபாயின்ட்… appeared first on Dinakaran.