×

ஆஸி ஓபன் டென்னிஸ் ஹாட்ரிக் பைனலில் சபலென்கா: முதல் முறையாக மேடிசன்

மெல்போர்ன்: ஆஸி ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் நேற்று பெண்கள் பிரிவு ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெலாரசின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் பவுளா படோசா ஆகியோர் மோதினர். நம்பர் ஒன் வீராங்கனைக்கு உரிய வேகத்துடன் விளையாடிய சபலென்கா 2 செட்களையும் 6-4, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் 2-0 என நேர் செட்களில் எளிதாக வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஆஸி ஓபனில் தொடர்ந்து 3வது முறையாக சபலென்கா பைனலில் விளையாட உள்ளார்.

தொடர்ந்து அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் – ேபாலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2வது அரையிறுதியில் மோதினர்.  இந்த போட்டியில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை குவிக்க 6-6 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் ஆட்டம் முடிந்தது. இதையடுத்து நடந்த டை பிரேக்கரில் மேடிசன் 3வது செட்டை 7-6(10-8) புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். இதன் மூலம் மேடிசன் முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளார். இறுதி ஆட்டத்தில் நாளை சபலென்கா-மேடிசன் ஆகியோர் மோத இருக்கின்றனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெறுகிறது.

The post ஆஸி ஓபன் டென்னிஸ் ஹாட்ரிக் பைனலில் சபலென்கா: முதல் முறையாக மேடிசன் appeared first on Dinakaran.

Tags : Sabalenka ,Australian Open ,Madison ,Melbourne ,Australian Open Grand Slam ,Aryna Sabalenka ,Belarus ,Spain ,Paula Badoza ,Dinakaran ,
× RELATED பரபரப்பான இறுதிச் சுற்றில் சூப்பராய்...