×

சேலத்தில் ரஞ்சி டெஸ்ட் தமிழ்நாடு 301 ரன் குவிப்பு: ஆந்த்ரே சித்தார்த் அதிரடி சதம்

சேலம்: ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டியின் 6வது சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. சேலத்தில் நடைபெறும் டி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-சண்டீகர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சண்டீகர் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான முகமது அலி, நாரயண் ஜெகதீசன் பொறுப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 101 ரன் விளாசியது. ஜெகதீசன் அரைசதம் விளாசிய 63 ரன்னிலும், முகமது 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பாபா இந்தரஜித், இளம் புயல் ஆந்தரே சித்தார்த் இணை நிதானமாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடிய பாபா இந்தரஜித் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்தனர். அதன் பிறகு அதிரடியாக விளையாடிய சித்தார்த் தனது முதல் ரஞ்சி சதத்தை அடித்தார். தொடர்ந்து விளையாடி அவர் 106 ரன்னில் (10 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 89.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன் குவித்தது. சண்டீகர் தரப்பில் விசு காஷ்யப் 5, ஜக்ஜித் சிங், நிசுங்க் பிர்லா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஜார்கண்ட் முதல் இன்னிங்சை 2வது நாளான இன்று தொடங்க உள்ளது.

The post சேலத்தில் ரஞ்சி டெஸ்ட் தமிழ்நாடு 301 ரன் குவிப்பு: ஆந்த்ரே சித்தார்த் அதிரடி சதம் appeared first on Dinakaran.

Tags : Ranji Test ,Tamil Nadu ,Andre Siddharth ,Salem ,Ranji Cup Test ,Chandigarh ,D-Group ,Mohammed Ali ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர்...