×

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்திய ஆடவர், மகளிர் அணி அறிவிப்பு

புதுடெல்லி: ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி வரும் பிப்ரவரி 11 முதல் 16 வரை சீனாவில் உள்ள கிங்டாவோ நகரில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை இந்திய பாட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற தொடரில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றிருந்தது.

* இந்திய ஆடவர் அணி: லக்சயா சென், ஹெச்.எஸ்.பிரனாய், சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி, துருவ் கபிலா, எம்.ஆர்.அர்ஜூன், சதீஷ்குமார்.

* மகளிர் அணி: பி.வி.சிந்து, மாளவிகா பன்சோத், காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி, அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ, ஆத்யா வரியத்.

The post ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்திய ஆடவர், மகளிர் அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Asian Badminton Championships ,and women's ,New Delhi ,Asian Badminton Teams Championship ,Qingdao, China ,Badminton Federation of India ,Dinakaran ,
× RELATED தன்னம்பிக்கையும், வீரமும் ஊட்டி பெண் குழந்தைகளை பாதுகாப்பது நம் கடமை