- இந்தியா
- குகேஷ்
- சுவிச்சர்லாந்து
- சர்வதேச செஸ் கூட்டமைப்பு
- FIDE
- டி. குகேஷ்
- அர்ஜூன் எரிகாய்சி
- நெதர்லாந்து...
- தின மலர்
சுவிட்சர்லாந்து: சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) நேற்று, வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில், இந்திய வீரரான உலக சாம்பியன் டி.குகேஷ் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சக நாட்டவரான அர்ஜுன் எரிகைசியை பின்னுக்கு தள்ளி, நான்காம் இடத்தை பிடித்துள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் போட்டியில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை தோற்கடித்து, தனது 2வது வெற்றியை பதிவு செய்தபோது இந்த முன்னேற்றம் குகேசுக்கு கிடைத்துள்ளது.
தற்போது அவர், 2784 மதிப்பீட்டு புள்ளிகளை பெற்றுள்ளார். அதேநேரத்தில் நீண்ட காலமாக தரவரிசையில் 4வது இடத்தில் இருந்த இந்தியரான எரிகைசி, 2779.5 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இப்பட்டியலில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 2832.5 புள்ளிகளுடன் உலகின் நம்பர்-1 வீரராக தொடர்கிறார். அதைத்தொடர்ந்து அமெரிக்காவின் கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா (2802), பேபியானோ கருவானா (2798) ஆகியோர் 2, 3வது இடத்தில் உள்ளனர். உலக அளவில் 4வது இடத்தையும், இந்திய அளவில் நம்பர்-1 வீரராகவும் குகேஷ் மாறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் சிங்கப்பூரில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி, உலக சாம்பியன் பட்டத்தை வென்றதில் இருந்து குகேஷ் அற்புதமான பார்மில் உள்ளார். ஒரு மாதத்திற்கும் மேல் ஓய்வு எடுத்துக்கொண்டு இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்த விழாக்களில் கலந்து கொண்ட அவர், நியூயார்க்கில் நடந்த உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை தவிர்த்துவிட்டார். தற்போது மீண்டும் களத்திற்கு திரும்பிய நிலையில், நெதர்லாந்தில் நடக்கும் டாடா ஸ்டீல் போட்டில் ஒரு ஆட்டத்திலும் தோல்வியடையவில்லை. இன்னும் 8 சுற்றுகள் மீதமுள்ள நிலையில், இதுவரை நடந்த போட்டியில் அவர் 2 வெற்றி, 3 டிரா கண்டுள்ளார்.
The post உலக செஸ் தரவரிசையில் 4வது இடம்: இந்தியாவின் நம்பர்-1 குகேஷூக்கு மகுடம் appeared first on Dinakaran.