×

டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

கிருஷ்ணகிரி, ஜன.24: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகேயுள்ள சின்னமட்டாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(25). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 21ம் தேதி, தனது டூவீலரில் மகராஜகடையில் இருந்து வரட்டனப்பள்ளி ரோட்டில் உள்ள செல்போன் டவர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக டூவீலரில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Srinivasan ,Chinnamattarapalli ,Kantikuppam ,Krishnagiri district ,Maharajakadai ,Varattanapalli Road… ,
× RELATED ஒன்றிய பட்ஜெட்டில்...