- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- வீரவனக்க தினம்
- திமுக
- அமைச்சர்
- தொ.மு.ச.அன்பரசன்
- காஞ்சிபுரம்
- கண்டோன்மென்ட் பல்லாவரம்
- வடக்கு மாவட்டம்
- தின மலர்
காஞ்சிபுரம்: கன்டோன்மென்ட் பல்லாவரம் அருகே நாளை நடைபெறவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டத்தில், திமுகவினர் பல்லாயிரக்கணக்கில் அலைகடலென திரண்டு வாரீர் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை மாலை 5 மணியளவில், கன்டோன்மென்ட் பல்லாவரம் ராஜேந்திரபிரசாத் சாலை, தெரசா பள்ளி அருகில் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசனாகிய நான் தலைமை தாங்குகிறேன்.
தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ முன்னிலை வகிக்கிறார். மாவட்ட துணை செயலாளர் இ.கருணாநிதி எம்எல்ஏ வரவேற்று பேசுகிறார். கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பற்றி பேசுகிறார். இக்கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், தலைமை தீர்மான குழு செயலாளர் மீ.அ.வைதியலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் த.துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, து.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆர்.மனோகரன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர் செம்பருத்தி துர்கேஷ், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ்,
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வீ.தமிழ்மணி, ஜி.சி.அன்புச்செழியன், க.அன்புச்செல்வன், ஆதிமாறன் மற்றும் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கழக பொதுக்குழு உறுப்பினர்கள், திமுக அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கிறார்கள். முடிவில் கன்டோன்மென்ட் நகர செயலாளர் டி.பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எல்.பிரபு ஆகியோர் நன்றி கூறுகிறார்கள். கோலாகலமாக நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து மாநகர, பகுதி, ஒன்றிய, நகர பேரூர் சிற்றூர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கில் திமுகவினர் அணி திரண்டு வந்து பங்கேற்று,
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வரலாற்றில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியதில்லை என்று வரலாற்று சாதனையை படைக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த திமுக தோழர்களும் அலைகடலென திரண்டு வந்து பங்கேற்று புதியதோர் வரலாற்றை படைத்திட வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து திமுக தோழர்கள் அனைவரும் நாளை மாலை 4.30 மணிக்கெல்லாம் கன்டோன்மென்ட் பல்லாவரத்திற்கு அலைகடலென திரண்டு வந்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்; திமுகவினர் பல்லாயிரக்கணக்கில் அலைகடலென திரண்டு வாரீர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு appeared first on Dinakaran.