×

பறிமுதல் வாகனங்கள் ஏலம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 26 பலதரப்பட்ட வாகனங்கள் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப் பிரிவின்படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  மேலும், தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட பிரிவின்படி அரசுக்கு பறிமுதல் செய்யபட்டு 9.8.2024ம் தேதி விடப்பட்ட பொது ஏலத்தில் ஏலம் போகாத 23 வாகனங்கள் என மொத்தம் 49 வாகனங்கள் தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வரும் 30.1.2025ம் தேதி காலை 10 மணி முதல் செங்கல்பட்டு மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் ஐடிஐ மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 28.1.2025ம்தேதி முதல் 29.1.2025ம்தேதி மாலை 5 மணி வரை நுழைவு கட்டணமாக ரூ1000 செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையையும் ஏலத்தொகையுடன் 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியும் சேர்த்து உடனே செலுத்தவேண்டும். இதற்கு உண்டான ரசீது வழங்கப்படும். மேலும், பதிவு எண், எஞ்சின் எண், சேஸ் எண், இல்லாத வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய இயலாது. ஏலம் எடுத்த வாகனத்திற்கு உண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.

மேலும், விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலத்தில் அமைந்துள்ள துணை காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

The post பறிமுதல் வாகனங்கள் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu District Police ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில்...