×

தமிழர் நலனில் அக்கறையில்லை.. குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்!!

சென்னை : குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன. குடியரசு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது நடைமுறையான ஒன்று. வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக திமுக கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார்.

ஆகவே ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டும் இதேபோல் குடியரசு தினத்திற்கான ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

The post தமிழர் நலனில் அக்கறையில்லை.. குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்!! appeared first on Dinakaran.

Tags : Republic Day ,Governor R. N. ,DIMUKA ALLIANCE ,RAVI ,Chennai ,Governor ,R. N. ,DIMUKA ALLIANCE PARTIES ,Governor's House ,Republic ,Independence Day ,Tamils ,R. ,
× RELATED 76வது குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.