×

கிராம சபை கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விவாதிக்கலாம்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

திருச்சி.ஜன.23: திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜன.26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவா் பிரதீப் குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஜன.26ல் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் கடந்த 2024 ஏப்.1 முதல் டிச.31 வரை கிராம ஊராட்சியின் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்,

கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையினை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26ம் நிதியாண்டில் கிராம வளா்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் போன்றவற்றை கிராம சபையில் விவாதிக்கப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜன.26 காலை 11 மணிக்கு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளதால் அனைத்து பொதுமக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post கிராம சபை கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விவாதிக்கலாம்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gram ,Sabha ,Collector ,Trichy.Jan ,Trichy district ,Republic Day ,Trichy ,District Collector ,Pradeep Kumar ,Gram Sabha ,Dinakaran ,
× RELATED ஊஞ்சாம்பட்டி ஊராட்சி வார்டுகளை தேனி...