திருவாரூர், ஜன.23: குடியரசு தின விழாவையொட்டி திருவாரூரில் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருவதுடன் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தூய்மை பணிகளும் நடைபெற்று வருகின்றன. நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாவட்ட கலெக்டர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். வரும் 26ந் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு அலுவலக மைதானத்தில் இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது.
இந்நிலையில் இதில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதையொட்டி இந்த விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணியிலும், விழா மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடம் போன்றவற்றில் வர்ணம் தீட்டும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குடியரசு தின விழாவிற்காக கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்றவற்றில் ஏற்றுவதற்கு உரிய தேசிய கொடியினை வாங்கும் பணியில் பொது மக்கள் ஈடுப்பட்டு வருவதால் இந்திய தேசியக் கொடிகளின் விற்பனையானது திருவாரூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
The post குடியரசு தின விழாவையொட்டி தேசியக் கொடி விற்பனை மும்முரம் appeared first on Dinakaran.