×

திருவாரூரில் 3வது புத்தக கண்காட்சி பேருந்துகளில் லோகோ ஒட்டி விழிப்புணர்வு

திருவாரூர், ஜன.23: திருவாரூரில் நாளை முதல் துவங்கவுள்ள 3வது புத்தகண்காட்சியினையொட்டி பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் லோகோ ஓட்டும் பணியினை கலெக்டர் சாரு துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட புதியபேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகரில் நாளை முதல் அடுத்த மாதம் 2ந் தேதி வரை நடைபெறவுள்ள 3வது புத்தககண்காட்சியினையொட்டி புத்தக திருவிழாவில் மாநிலம் முழுவதும் இருந்து வரும் அனைத்து பதிப்பகத்தினரையும் பங்கு பெற செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ப்ளக்ஸ் பேனர், சுவரொட்டி விளம்பரம், வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்டவைகளில் விளம்பரம் செய்யப்பட்டு வருவதுடன் அரசு பேருந்து ஒன்றின் மூலம் மாவட்டம் முழுவதும் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கண்காட்சி நடைபெறும் நாட்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து வழித்தடத்திலும், சிறப்பு பேருந்துகள் இயக்கவும், கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் இசைப்பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் புத்தக திருவிழா நடக்கும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சீராக வந்து செல்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புத்தக கண்காட்சி குறித்து விழிப்புணர்வு பேரணியும் நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று புத்தக கண்காட்சி தொடர்பாக பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் லோகோ ஓட்டும் பணியினை கலெக்டர் சாரு துவக்கிவைத்தார். இதில் ஆர்.டி.ஒ சௌம்யா, அரசு போக்குவவரத்து கழக பொது மேலாளர் ராஜா, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post திருவாரூரில் 3வது புத்தக கண்காட்சி பேருந்துகளில் லோகோ ஒட்டி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : 3rd Book Fair ,Thiruvarur ,Collector ,Charu ,S.S. Nagar ,Thiruvarur District ,
× RELATED திருவாரூரில் 3வது புத்தக கண்காட்சியினை கலெக்டர் தொடங்கி வைக்கிறார்