×

தெற்கு ஆசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி வெண்கலம் வென்று ஓய்வு பெற்ற எஸ்ஐ சாதனை

மன்னார்குடி, ஜன. 23: கர்நாடக மாநிலம் மங்களூரில் அண்மையில் நடந்த தெற்கு ஆசிய அளவி லான முதலாம் மூத்தோர் தடகளப் போட்டிகளில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட த்தில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்த மன்னார்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்ஐ நடராஜனை திருவாரூர் மாவட்ட எஸ்பி கருண் கரட் பாராட்டினார். தெற்கு ஆசிய அளவிலான முதலாம் மூத்தோர் தடகள சாம்பியன் பட்டப் போட்டிகள் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள மங்களா விளையாட்டு அரங்கில் அண்மையில் 3 நாட்கள் நடந்தது. இதில், ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், நடைப்போட்டி உள்ளிட்ட 27 விதமான தடகள போட்டிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்தது.

இந்த போட்டிகளில், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாள், பூடான், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 30 வயது முதல் 97 வயதிற்குட்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசேஷம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ நடராஜன் (71) என்பவர் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 59 நிமிடம் 29 வினாடிகளில் ஓடி 3ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தெற்கு ஆசிய மூத்தோர் தடகள சங்க தலைவர் இவான் டி செளஷா கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஓய்வுபெற்ற எஸ்ஐ நடராஜனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தெற்கு ஆசிய அளவிலான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் வரும் நவம்பர் மாதம் தாய்லாந்த் அல்லது சிங்கப்பூரில் நடைபெற உள்ள உலக அளவிலான மூத்தோர் தடகள சாம்பியன் பட்டப் போட்டிகளில் ஓய்வு பெற்ற எஸ்ஐ நடராஜன் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.

தகவலறிந்த திருவாரூர் மாவட்ட எஸ்பி கருண் கரட் தெற்கு ஆசிய அளவிலான முதலாம் மூத்தோர் தடகள சாம்பியன் பட்டப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற ஓய்வு பெற்ற எஸ்ஐ நடராஜனை தனது அலுவலகத்திற்கு நேற்று வரவழைத்து அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்தினார். அதுபோல் தனது முகாம் அலுவலக த்திற்கு வந்த ஓய்வு பெற்ற எஸ்ஐ நடராஜனை மன்னார்குடி டிஎஸ்பி பிரதீப்பும் பாராட்டினார்.

The post தெற்கு ஆசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி வெண்கலம் வென்று ஓய்வு பெற்ற எஸ்ஐ சாதனை appeared first on Dinakaran.

Tags : SI ,South Asian Senior Athletics Championships ,Mannargudi ,Mangalore, Karnataka ,Dinakaran ,
× RELATED மளிகை கடையில் பார் நடத்தியவர் கைது