×

தஞ்சை யோக நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர், ஜன.23: யோகங்களை வாரி வழங்கும் யோக நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. தஞ்சாவூர் கொண்டிராஜ பாளையம் யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் நேற்று தை மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவர் யோக நரசிங்கப் பெருமாளுக்கும் உற்சவர் லெட்சுமி சமேத யோக நரசிங்கப் பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சுவாதி நட்சத்திரம் தோறும் யோக நரசிங்கப் பெருமாளை தரிசனம் செய்தால் யோகங்களை பெறலாம் என்பது ஐதீகம். பக்தர்கள் செய்யும் தொழிலில் ஏற்படும் கண்திருஷ்டி விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை இன்றைய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு யோக நரசிம்மரை தரிசனம் செய்தார்கள்.

The post தஞ்சை யோக நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Swathi ,Thanjavur ,Yoga ,Narasimha Temple ,Yoga Narasimha Temple ,Thai ,Yoga Narasimha Perumal ,Kondirajapalayam Yoga ,Narasimha Perumal Temple ,Thanjavur… ,Thanjavur Yoga ,Narasimha ,Temple ,
× RELATED சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு...