- ஆயுதமேந்திய போலீஸ் படை
- பெரம்பலூர்
- 75 வது குடியரசு தினம்
- இந்தியா
- பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வளாகம்
- பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம்…
- தின மலர்
பெரம்பலூர்,ஜன.23: பெரம்பலூரில் நடைபெற உள்ள 75வது குடியரசு தின விழாவையொட்டி ஆயுதப் படை வளாகத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்திய நாட்டின் 75வது குடியரசு தினவிழா பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகிற 26ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சப். கலெக்டர் கோகுல் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் விழாவில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளை கௌரவித்து, காவல் துறையினர், ஊர்க்காவல் படையினருடன் இணைந்து நடத்தும் அணி வகுப்பு மரியாதையை ஏற்கிறார்.
இதனையொட்டி, நேற்று (22 ஆம்தேதி) புதன்கிழமை காலை பெரம்பலூர் அருகே, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர் பந்தல் பகுதியில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கட்டுப் பாட்டில் இயங்கி வரும் ஆயுதப்படை மைதானத்தில், பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழகன் தலைமையில், ஆயுதப்படை டிஎஸ்பி (பொ) பிரபு முன்னிலையில், ஆயுதப்படை இன்ஸ் பெக்டர் தங்கமாளிகை உள்ளிட்டப் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில், ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார் அடங்கிய தலா 23 கொண்ட 3 பிளட்டோன் படைப் பிரிவுகளைச் சேர்ந்த 69பேர், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், மான், ரத்தினம், இன்ஸ்பெக்டர் தங்கமாளிகை என மொத்தம் 73 பேர் இந்த அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் ஊர்க்காவல் படையினர் குடியரசு தினவிழா அணி வகுப்பில் இணைந்து செல்வர்.
The post பெரம்பலூரில் 75வது குடியரசு தின விழாவைமுன்னிட்டு ஆயுதப் படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகை appeared first on Dinakaran.