கரூர் ஜன, 23: கரூரில் மாணவ மாணவியருடன் ஸ்கேட்டிங் பயில்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இன்று தமிழ்நாட்டில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விளையாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்கள் வகுத்து தேசிய அளவிற்கு தமிழக விளையாட்டுகளை மேம்படுத்து வருகின்றனர். ஒரு அங்கமாக தமிழக முதல் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்ட அளவில் சிறப்பு பரிசு பெற்ற மாணவனை பரிசு வழங்கி பாராட்டினார். மாவட்டத்தில் குறிப்பாக கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மாணவ, மாணவர்கள் ஸ்கேட்டிங்போய் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தனியாக பிரத்யோகமாக பயிற்சியாளர் கள் அமைத்து தினசரி காலை 6 முதல் காலை 9 மணி வரை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஸ்கேட்டிங் பழகும் பொழுது ஒரு ஸ்கேட்டிங் போர்ட் சுமார் 2000 முதல் 5000 க்கு குறைவாக இருக்கும். அதன் பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்ல செல்ல ஒரு ஸ்கேட்டிங் விலை ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை தரத்திற்கு ஏற்றார் போல் மாணவர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஸ்கேட்டிங் பயிலும் மாணவர்களுக்கு பிரத்தியோக சிறப்பு என்னவென்றால் வாடியமைப்பு மிகவும் சீராகும் ஃபிட்டாக பாடி அமைப்பதற்கு வசதியாக அமைகிறது. ஸ்கேட்டிங் விளையாட்டு வயதிற்கு ஏற்றார் போல் 8 வயது முதல் 12 வயது, 12வயது முதல் 16 வயது முதல், 16 வயது முதல் 20 வயது முதல் மற்றும் ஓபன் கேட்டகிரி இவ்வாறு பல்வேறு கேட்டகிரி இருப்பதால் அதற்கு ஏற்றார் போல் மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்கின்றனர். உடல் நலனை கருத்தில் கொண்டும்.
நல்ல உடல்வாகு கொண்டவர்களும் மிகப்பெரிய வர்மன் உடலை கொண்டு அவர்கள் கூட ஆறு முதல் 9வது மாதம் முழுமையாக ஸ்கேட்டிங் பயிற்சி செய்தால் உடல்களை அருமையாக குறைக்க முடியும் என்பதால் ஸ்கேட்டிங் பயிற்சி மட்டுமின்றி உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். மேலும் ஸ்கேட்டிங் விளையாட்டு தேசிய மற்றும் ஒலிம்பிக் வரை செல்வதால் அதை பதக்கம் பெற்று விட்டால் மிகப்பெரிய அளவிற்கு அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் என்பதால் மாணவர்கள் அதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். எது எப்படியோ விளையாட்டு துறைக்கு மாணவர்கள் தனி கவனம் செலுத்தி அவர்கள் சிறப்பாக விளையாடி அடுத்த நிலைக்கு செல்வது வரவேற்கத்தக்கதாகும்.
The post ஸ்கேட்டிங் கற்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் appeared first on Dinakaran.