×

கரூரை மிரட்டும் பனிப்பொழிவு

கரூர், ஜன. 23: கரூரில் கடந்த சில நாட்களாக நேற்று அதிகாலையில் மிரட்டும் கடும் பனிப் பொழிவு காரணமாக அனைத்து தரப்பினர்களும் அவதிப்பட்டு விட்டனர். வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. மேலடுக்கு சுழற்சி உட்பட பல்வேறு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்தது. கரூர் மாவட்டத்திலும் ஒரளவு மழை பெய்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு கரூர் மாவட்டத்தில் இரூந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

கடந்த மூன்று நாட்களாக பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளி, கல்லு£ரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதோடு, அதிகாலை நேரங்களில் நடைப் பயிற்சி (வாக்கிங்) மேற்கொள்ள செல்லும் அனைவரும் சற்று தாமதமாகத்தான் நடைபயிற்சியை மேற்கொள்கின்றனர். அந்தளவுக்கு பனிப் பொழிவின் தாக்கம் உள்ளது. மார்கழி மாதம் வரை இதன் தாக்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலை வரை பனிப்பொழிவின் தாக்கம், 10 மணிக்கு பிறகு சுட்டெரிக்கும் வெயில் என்ற இரண்டு விதமான சீதோஷ்ண நிலை ஏற்படுக்குள்ளது.

The post கரூரை மிரட்டும் பனிப்பொழிவு appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கரூர் மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்