×

கருப்பண்ணசாமி கோயிலில் மண்டல பூஜை, சிறப்பு ஹோமம்

குளித்தலை, ஜன.23: கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் பகுதியில் உள்ளது எல்லரசு கருப்பண்ண சுவாமி மதுரைவீரன் மலையாள சுவாமி, விநாயகர் பைரவர் கோயில். இக்கோயிலில் புனரமைப்பு பணி நடைபெற்று கடந்த மாதம் ஆறாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் மண்டல பூஜை உபயதாரர்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. 48 நாள் மண்டல பூஜை நடைபெற்று நிறைவு நாளான நேற்று கோயிலில் உள்ள சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு ஹோமம் நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post கருப்பண்ணசாமி கோயிலில் மண்டல பூஜை, சிறப்பு ஹோமம் appeared first on Dinakaran.

Tags : Mandala ,Karuppannaswamy ,Kulithalai ,Ellarasu Karuppannaswamy ,Madurai ,Veeran Malayala Swamy ,Vinayagar ,Bhairava ,Periya Palam ,Kulithalai, Karur district ,Kumbabhishekam ,Pooja ,Karuppannaswamy temple ,
× RELATED கரூர் குளித்தலையில் கடும்...