×

மது போதையில் மினி பேருந்தை இயக்கும் ஓட்டுனர்களால் பயணிகள் பீதி

குன்னூர், ஜன.23: குன்னூரில் போக்குவரத்து விதிகளை மீறும் மினி பேருந்துகள், முறையாக மினி பேருந்துகளை இயக்க வேண்டுமென்று டிஎஸ்பி முத்தரசன் தலைமையில் மினி பேருந்து உரிமையாளர்கள், ஒட்டுநர்கள், நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு சுமார் 15க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீப காலமாக மது அருந்திக்கொண்டும், மகளிர் கல்லூரிக்கு செல்லும் வழித்தடத்தில் இரட்டை அர்த்த பாடல்களை ஒளிபரப்பு செய்து கொண்டும், அதிவேகமாக அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்கி கொண்டும் மினி பஸ் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், மாற்று ஓட்டுநர் நடத்துநர்கள் காலை முதல் மாலை வரை குடிபோதையில் இருந்து கொண்டு, பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவிகளை தகாத வார்த்தையில் பேசுவதாக புகார் எழுந்து வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அருண் பிரசாத் ஆகியோர் குன்னூரில் இயக்கப்படும் மினி பேருந்துகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிகளை மீறி வைக்கப்பட்ட ஹாரன்கள், ஆடியோக்களை அதிகாரிகள் கழட்டி சென்றனர். மேலும், போக்குவரத்து விதிகளை மீறிய 6 பேருந்துகளுக்கு சுமார் 1000 ரூபாய் வீதம் மொத்தம் 6000 ரூபாய் அபராதம் விதித்தனர். ஆனால், சில மினி பேருந்துகள் மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், டிஎஸ்பி முத்தரசன் தலைமையில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்கள் முன்னிலையில், குன்னூரில் இயக்கப்பட்டு வரும் மினி பேருந்துகளின் உரிமையாளர்கள், ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு, காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் முல்லை மஹாலில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

குறிப்பாக மினி பேருந்துகளை அதிவேகமாக இயக்ககூடாது, பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளை படியில் நின்று பயணம் செய்ய அனுமதிக்க கூடாது, மீறும் பட்சத்தில் காவல் துறையினர் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும், தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பஸ் நிறுத்தத்தை தவிர வேறு எங்கும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லவோ இறக்கி விடவோ கூடாது, இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இவற்றை மீறும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்ககூடாது, ஓட்டுநர் மற்றும் நடத்தினர்கள் உரிய சீருடையில் வாகனத்தை இயக்க வேண்டும். என்று அறிவுரைகளை வழங்கினர்.

The post மது போதையில் மினி பேருந்தை இயக்கும் ஓட்டுனர்களால் பயணிகள் பீதி appeared first on Dinakaran.

Tags : Coonoor ,DSP ,Mutharasan ,Dinakaran ,
× RELATED குன்னூர் மலைப்பாதையில் பழுதான கேமராக்களை மாற்ற வலியுறுத்தல்