×

மரக்கன்றுகளை சேதம் செய்த மர்ம நபர்கள்

தாரமங்கலம், ஜன.23:தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி ஊராட்சி, காப்புகாடு பகுதியில் உள்ள அரசு நிலத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் 50 புளிய மரக்கன்றுகள் வைக்கப்பட்டது. மரக்கன்றுகள், அருகில் இருக்கும் நிலத்திற்கு செல்ல வேண்டிய பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த மரக்கன்றுகளை அகற்றுமாறு, தாரமங்கலம் பிடிஓவிடம் புகார் மனு கொடுக்கபட்டது. நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் மரக்கன்றுளை சேதப்படுத்தினர். இதனால், நேற்று காலை, மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாரமங்கலம் போலீசார், ஓமலூர் தாசில்தாரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளுமாறு கூறினர். அதன் பிறகு, அங்கிருந்து 20க்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post மரக்கன்றுகளை சேதம் செய்த மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Tags : Taramangalam ,Kapukadu ,Ramireddypatti panchayat ,Dinakaran ,
× RELATED பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது