×

மாற்றுத்திறனாளிகள் 93 பேர் மீது வழக்கு

ஓமலூர், ஜன.23:ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகில், மாற்றுத்திறனாளிகள் சங்க இணை செயலாளர் செல்வராணி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், ஆந்திரா மாநிலத்தை போல், தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹15,000 மாத உதவி தொகை வழங்க வேண்டும். அந்தியோதயா அன்னயோஜன திட்டத்தின் மூலம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, அனுமதியின்றி போராட்டம் நடத்தினர். பொது இடத்தில் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, கைது செய்த போலீசார் 44 பெண்கள் உட்பட 93 மாற்றுதிறனாளிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாற்றுத்திறனாளிகள் 93 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Omalur ,Omalur Taluga ,Selvarani ,Disabled People's Association ,Andhra State ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஓமலூர் வட்டாரத்தில் கொத்தமல்லி விற்பனை அதிகரிப்பு