×

சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு உலக நன்மை வேண்டி

பெரணமல்லூர், ஜன.23: பெரணமல்லூர் அருகே வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் சிறப்பு வாய்ந்த வரதராஜபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகவேள்வி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு அதிகாலை மூலவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மேலும் உற்சவமூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தி பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் யாகவேள்வி வளர்க்கப்பட்டு திருமணதடை மற்றும் கடன்தொல்லை நீங்கவும், உலகநன்மைகாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. இதில் காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு உலக நன்மை வேண்டி appeared first on Dinakaran.

Tags : Swathi ,Peranamallur ,Varadaraja Perumal temple ,Varadaraja ,Perumal temple ,Injimedu ,Swathi star ,
× RELATED மாணவர்கள் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது