- வேலூர்
- மாவட்ட அறிவியல் மையம்
- வேலூர் மாவட்டம்
- அறிவியல் மையம்
- கலைஞர் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம்
- சத்துவாச்சாரி, வேலூர்
வேலூர், ஜன.23: வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் நிகழ்வை பார்க்க பொதுமக்கள் திரண்டனர். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கலைஞர் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் உள்ளது. இங்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனுறும் வகையில் தொலைநோக்கி மூலம் வானில் உள்ள வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் நிகழ்வை நேற்று முதல் நாளை வரை மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக இருக்கும் பட்சத்தில் தொலைநோக்கி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று மாலை மாவட்ட அறிவியல் மையத்தில் 6 கோள்களை ஒரே நேர்கோட்டில் பார்ப்பதற்காக திரண்டனர். ஆனால், நேற்று மாலை வெள்ளி, வியாழன் ஆகிய 2 கோள்கள் மட்டுமே பார்கக முடிந்ததால், பொதுமக்கள் சற்றே ஏமாற்றமடைந்தனர். இருப்பினும்,6 கோள்களை பார்க்க முடியும் என்பதால் 2 நாட்களிலும் பொதுமக்கள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளதாக அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் நிகழ்வை பார்க்க திரண்ட பொதுமக்கள் வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் appeared first on Dinakaran.