தாம்பரம், ஜன. 23: தாம்பரத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேற்கு தாம்பரம், அழகேசன் தெருவில் ரிடெக்ட் சொல்யூஷன்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பொறியியல் திட்டங்கள் இன்டர்ன்ஷீப் வாய்ப்புகள் மற்றும் லேசர் இயந்திரங்களை வடிவமைத்தல் மற்றும் உருவாக்கத்தில் சிறப்பு பெற்றவை. அதே நேரத்தில் பொறியாளர்களுக்கு பயிற்சி மற்றும் கற்ற வாய்ப்புகளை வழங்குவதை இந்த நிறுவனம் செய்து வருகிறது. தாம்பரத்தில் உள்ள அலுவலகத்தில் 15க்கு மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தை ராஜா ராஜன் என்ற பிஇ பட்டதாரி அவரது சகோதரருடன் சேர்ந்து நடத்தி வந்தார். இந்நிலையில், அலுவலகத்தில் பணிபுரிந்த 23 வயது பெண்ணிடம் தொடர்ச்சியாக அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டி உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா ராஜனை கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post தாம்பரத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: உரிமையாளர் கைது appeared first on Dinakaran.