- மோகனூர்
- சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை
- சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- நிர்வாகி
- பி) யோகவிஷ்ணு
- மருத்துவ
- தின மலர்
மோகனூர், ஜன. 23: மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் சுவாமி விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் (பொ) யோகவிஷ்ணு தொடங்கி வைத்தார். முகாமில் கண், இருதயம், எலும்பு, கர்ப்பப்பை, சிறுநீரகம், மூளை, மூட்டுமாற்று அறுவை சிகிச்சை இடுப்பு மூட்டு மாற்று பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாட்டை சர்க்கரை ஆலை மருத்துவ ஆலோசகர் ஜனார்த்தனன், தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன் செய்திருந்தனர்.
The post இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.