×

பெரியபாளையம் அருகே சிறுவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பெண் கைது

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே சிறுவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரம் வினோதினி (24) என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் வினோதினி 11ஆம் வகுப்பு மாணவனை ஆசை வார்த்தை கூறி காதலித்து கடந்த டிசம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுவனை காணாத பெற்றோர் இது தொடர்பாக பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுவன் காணாமல் போன புகார் குறித்து வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் போலீசார் காணாமல் போன பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிறுவனை அருகில் வசிக்கும் பெண் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் பதுங்கி இருந்த ஊருக்கு சென்று சிறுவனை மீட்டு இளம்பெண்ணை கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வினோதினியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளூர் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பெரியபாளையம் அருகே சிறுவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Beriyapalayam ,Beriyapaliam ,Beriapaliam ,Periyapaliam, Thiruvallur District ,Periyapaliam ,
× RELATED எடப்பாடி சொந்த ஊரில் குழி தோண்டும் டிடிவி