×

கஞ்சா விற்ற இருவர் கைது

சேலம், ஜன.22: சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். செவ்வாய்பேட்டை மீனாட்சி அம்மன் கோயில் பின்புறம் சந்தேகிக்கும் வகையில் இருந்த மூன்று இளைஞர்களை அழைத்து போலீசார் விசாரித்தனர். அதில் செவ்வாய்பேட்டை சந்தைப்பேட்டையை சேர்ந்த பூபதி (24), குரங்குச்சாவடி பகுதியைச் சேர்ந்த கரண் (23), அழகாபுரம் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வது தெரியவந்தது.

விசாரணையின் போது கார்த்திக் தப்பியோடிவிட்டார். இதையடுத்து பூபதி, கரண் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கஞ்சா விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Sevvaipettai ,Inspector ,Devarajan ,Meenakshi ,Amman Temple ,Sevvaipettai… ,Dinakaran ,
× RELATED கால்வாய் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்