×

குளு குளு காலநிலையை அனுபவிக்க குவியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

 

ஊட்டி, ஜன. 22: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டு முழுவதும் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களிலும், இரண்டாவது சீசன் காலமான செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நிலவும் இதமான சீதோசன நிலையை அனுபவிக்க வந்து செல்கின்றனர்.
இதுமட்டுமின்றி ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஊட்டியில் உறைப்பனி சீசன் காலமாகும்.

குளு குளு காலநிலையை அனுபவிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இந்நிலையில், தற்போது ஊட்டியில் உறைப்பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் குளு குளு காலநிலை நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெயிலுடன் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால், ஊட்டிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுற்றுலா தளங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு தென்படுகிறார்கள். ஊட்டி நகரில் உலா வரும் சுற்றுலா பயணிகள் யாருடைய உதவியுமின்றி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களின் வரைப்படங்களை வைத்து கொண்டு தாமாகவே சென்று பார்த்து மகிழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. மேலும், பழங்குடியின மக்கள் வசிக்கக் கூடிய கிராமங்களுக்கு சென்று அவர்களின் பாரம்பரிய, கலாச்சார தகவல்களை பார்த்து மகிழ்கின்றனர்.

The post குளு குளு காலநிலையை அனுபவிக்க குவியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris ,Dinakaran ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளுக்கு நீர் பாய்ச்சும் பணி