×

பெரியநாயக்கன்பாளையத்தில் தோட்டத்து வீட்டின் கதவை தட்டிய காட்டு யானை

 

பெ.நா.பாளையம், ஜன.22: கோவை பெரியநாயாக்கன்பாளையம் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் இரவு நேரத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்றும் வழக்கம்போல பால மலை அடிவார வன பகுதியில் இருந்து வந்த குட்டியுடன் கூடிய 4 காட்டு யானைகள், கோவனூர் மற்றும் நாயக்கன்பாளையம் பகுதிக்கு அதிகாலை 3 மணிக்கு வந்தது. அப்போது நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் என்பவரது தோட்டத்தில் புகுந்த யானைகள் பயிர்களை சாப்பிட்டபின் அருகில் இருந்த வீட்டின் முன்பு வந்தது.

அங்கு வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை இழுத்து சேதப்படுத்தியது. அதில் ஒரு யானை வீட்டின் இரும்பு கதவை தட்டி தட்டி பார்த்தது. அங்கிருந்த குட்டியுடன் வந்த 3 யானைகள் சிறிது நேரம் நின்று விட்டு மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து விட்டது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து யானைகளை வனத்திற்குள் விரட்டியடித்தனர்.

The post பெரியநாயக்கன்பாளையத்தில் தோட்டத்து வீட்டின் கதவை தட்டிய காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Periyanayakkanpalayam ,P.N.Palayam ,Coimbatore ,Pala hills… ,
× RELATED அசோகபுரம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு