- பவானி
- பவானி ஊரடச்சி ஒன்றிய அலுவலகம்
- தமிழ்நாட்டின் அனைத்து வகையான ஊனமுற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் உரிமைகளுக்கான சங்கம்
- போராட்டம்
பவானி, ஜன.22: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை அதிகரிக்கக்கோரி பவானியில் சிறை நிரப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் பவானி தாலுகா தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆர்.சின்னசாமி, தாலுகா பொருளாளர் மனோகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பி.பி.பழனிச்சாமி, சிஐடியு பவானி தாலுகா செயலாளர் ஜெகநாதன், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் மாணிக்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
இதில், கமிட்டி உறுப்பினர்கள் முருகன், வாசு, கவுந்தப்பாடி மினியன், ராஜேந்திரன், மாறன், ஓடத்துறை கோவிந்தசாமி, குட்டிபாளையம் முத்து, பெரியபுலியூர் பழனிச்சாமி உட்பட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஆந்திரா போன்று உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் உதவித்தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 4 மணி நேரம் பணி என்ற பழைய நிலை தொடர வேண்டும். 6 மணி நேரம் பணித்தளத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும். அனைவருக்கும் முழுமையான வேலை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
The post பவானியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் appeared first on Dinakaran.