×

அந்தியூரில் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டத்தில் 120 பேர் கைது

 

அந்தியூர், ஜன.22: ஈரோடு மாவட்டம், அந்தியூரில் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படுவது போல ரூ.6 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் துறைமுகமே உதவித்தொகையை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 50 சதவீதம் 4 மணி நேர பணி என்ற பழைய நிலையை மீண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 60 பெண்கள் உட்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post அந்தியூரில் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டத்தில் 120 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Anthiyur ,Anthiyur Taluk Office ,Anthiyur, Erode district ,Marxist Communist Party ,Taluk ,Murugesan ,Andhra Pradesh government’s… ,Dinakaran ,
× RELATED அந்தியூரில் மண் பாண்ட உற்பத்திக்கு நவீன சுடுமண் சூளை