×

பேபி கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

 

ஈரோடு, ஜன.22: ஈரோட்டில் பேபி கால்வாய் தூர்வாரும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் சாய, தோல் ஆலை கழிவுகள், குடியிருப்பு பகுதிகளின் கழிவுகள் கலப்பதை தடுக்க, 7.கி.மீ தூரத்துக்கு துணை கால்வாயாக பேபி கால்வாய் கட்டப்பட்டது. இதில் வெளியேற்றப்படும் கழிவு பல இடங்களில் தேங்கி துர்நாற்றம் வீசும் சாக்கடையாக மாறியது. அதுமட்டுமின்றி, பிளாஸ்டிக் குப்பை, கழிவு குவிந்து காணப்பட்டது. இதனால், பேபி வாய்க்காலை ஒட்டி குடியிருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இவை தவிர, பேபி கால்வாயின் இருபுறமும் முள் மரங்கள் அடர்ந்து வளர்ந்து, விஷ ஜந்துகளின் பிறப்பிடமாக மாறியிருந்தது. இதன் காரணமாக, பேபி கால்வாயை தூர்வார வேண்டும் என்றும் கால்வாயை ஒட்டியுள்ள முள் மரங்களை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பேபி கால்வாய் பகுதிகளில், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, பேபி கால்வாயை தூர்வாரும் பணியில், மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பேபி கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Kalingarayan canal ,Dinakaran ,
× RELATED வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்...