தாராபுரம், ஜன.21: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் கிளாங்குண்டல் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலம், நீர் நிலைகளில் தனியார் நிறுவனம் மின் கோபுரங்களை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் தனியார் நிறுவனம் சார்பில் மீண்டும் மின் கம்பங்கள் அமைக்க அய்யம்பாளையத்திற்கு இயந்திரங்களுடன் வந்தனர். இது பற்றிய தகவல் அறிந்த விவசாயிகள், கிராம மக்கள் மின் கம்பங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நான்கு மணி நேரம் போராட்டம் நீடித்தது.
இந்நிலையில், மின் கம்பங்கள் அமைக்கும் பணியை கைவிட்டு தனியார் நிறுவனத்தினர் சென்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘தட்டான்குளத்திலும் மின்கம்பங்கள் அமைத்துள்ளதால் நீர்நிலையில் தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகள் பாதிக்கப்படுவதுடன் பெரும் மின் விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. வருவாய்த்துறையினர், காவல்துறையினர், விவசாயிகளின் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.
The post விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.