- நாமக்கல்
- நாமக்கல் மாவட்டம்
- கலெக்டர்
- உமா
- வேலூர்
- திருச்செங்கோடு தாலுகாக்கள்
- மக்கள் குறை தீர்க்கும் நாள்
- தின மலர்
நாமக்கல், ஜன.21: நாமக்கல் மாவட்ட கலெக்டா உமாவிடம், நேற்று திருநங்கைகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பரமத்தி வேலூர், திருச்செங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கடந்த ஆண்டு செப்டம்பரில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்தோம். 30 நாட்களில் ஏற்பாடு செய்து தருவதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த தகவலும் இல்லை. திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனையை, பரமத்திவேலூர், திருச்செங்கோடு தாலுகாவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் ஆபீசில் திருநங்கைகள் மனு appeared first on Dinakaran.