- படவரி
- செங்கல்பட்டு
- செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம்
- பெரியா
- நெல்குன்றம்
- சென்னை
- கவிகீர்த்தனா
- கின்டி...
செங்கல்பட்டு: இன்ஸ்ட்ராகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பெரியய்யா. இவரது மகள் கவிகீர்த்தனா (25). இவர் கிண்டியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, பெருந்தண்டலம் கிராமம் அண்ணாநகர் தெருவை சேர்ந்த திரவேங்கடம் என்பவரின் மகன் திருநாவுக்கரசு (26) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக இன்ஸ்ட்ராகிராம் மூலம் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் இருவரது காதலை ஏற்றுக்கொள்ள வில்லை.
எனவே, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து கடந்த 17-1-2025 அன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று அங்கிருந்து காதலன் திருநாவுக்கரசு வீட்டுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து, இருவரும் முழு சம்மதத்துடன் நேற்று திருப்போரூர் முருகன் கோயிலில் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதற்கிடையில், கவிகீர்த்தனாவின் பெற்றோர் கோயம்பேடு காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்ததின் பேரில் அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காதலர்கள் இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதாலும் இளம்பெண் பெற்றோருடன் வீட்டுக்கு போக மறுத்ததாலும் காதல் கணவன் திருநாவுக்கரசுவுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
The post இன்ஸ்ட்ராகிராம் மூலம் காதலித்து திருமணம் காவல் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.